கர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று

0
893
Karnataka goes bypoll today three Lok Sabha India Tamil News

கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது. (Karnataka goes bypoll today three Lok Sabha India Tamil News)

கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்தக் கூட்டணியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி மாத்திரமே களத்தில் உள்ளதுடன் பெல்லாரி உட்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, பொலிஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Karnataka goes bypoll today three Lok Sabha India Tamil News