பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

0
103

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த அரசின் அமைச்சரவையில் பதவி பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் விபரம். Mahinda Government Ministers Details Sri Lanka Tamil News

1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

2.நிமால் சிறிபால டி சில்வா போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

3.வெளிவிவகார அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

4.மகிந்த சமரசிங்க துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

6.மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைச்சராக ரஞ்சித்சியம்பலாப்பிட்டிய சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

7.கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

8.விஜித் விஜேமுனி சொய்சா மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

9.ஆறுமுகன் தொண்டமான் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10.டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்த சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

11.பைசர் முஸ்தபா மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

12. வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்ட விவகார அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites