செம்மரம் கடத்திய 4 தமிழர்கள் கைது

0
607
Red sandalwood smugglers arrested Tirupati India Tamil News

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்களை கைதுசெய்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் அவர்களிடம் இருந்து 30 இலட்சம் ரூபா மதிப்பிலான 25 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். (Red sandalwood smugglers arrested Tirupati India Tamil News)

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற இடத்தில் இன்று அதிகாலை 30 க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். இவர்களை சரணடையுமாறு பொலிஸார் எச்சரித்தனர்.

ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினால் கோதண்டம் என்ற பொலிஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

அவரை மீட்ட பொலிஸார் ரங்கம்பேட்டை அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மரக் கடத்தல் கும்பல் தொடர்ந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து, கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. அவர்களை விரட்டி சென்ற பொலிஸார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என்றும் தெரிய வந்தது.

இதில் தப்பியோடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரச வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியில் தப்பியோடியவர்களை பிடிக்க கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 இலட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

Tamil News Group websites

Tags; Red sandalwood smugglers arrested Tirupati India Tamil News