யாருக்கு யார் ஆதரவு? பெரும்பான்மை யார் கையில்?

0
512

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகவும் சிக்கலான நிலைமையை கையாள ரணில் மற்றும் மஹிந்த தரப்பினர் கடும் பேரம் பேசல்களில் இறங்கியுள்ள நிலையில் பெரும்பாலான சிறுபான்மை கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் செய்துள்ளன. Political Situation Update Sri Lanka Tamil News Today

இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவை ரணிலுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பிடம் மஹிந்த தரப்பு மற்றும் ரணில் தரப்பு ஆகியோர் ஆதரவு கோரியிருந்தனர் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற ஆனந்த அழுத்கமகே கூறியுள்ளார்.

இதன் காரணமாக யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது தொடர்பில் தொடந்து இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites