உலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும் முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய வந்துள்ளது. discovery world oldest ship Black Sea
கி.மு., 400ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கப்பல், கிரேக்க நாட்டு வாணிபக் கப்பல் என, ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கடலுக்கடியில் அத்தனை ஆழத்தில் ஆக்சிஜன் இருக்காது என்பதால், 23 மீ., நீளமுள்ள அந்தக் கப்பல், விபத்தில் உடைந்து மூழ்கியிருந்தாலும், அதன் பகுதிகளும் அதிலுள்ள பல பொருட்களும் சிதையாமல் அதன் உண்மையான வடிவிலேயே அப்படியே உள்ளன.
தொலைவியக்க முறையில் நீர்மூழ்கி கருவிகளை அனுப்பி, கப்பலை முப்பரிமாண முறையில் படமெடுத்து ஆராய்ந்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.
எண்ணெய், எரிவாயு இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படுகையை ஆராயும் சிறப்புக் கேமராவைப் பயன்படுத்தி, உடைந்த 60 கப்பல்களைத் தேடும் பணி கருங்கடலில் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தக் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கப்பலின் ஒரு பகுதியைக் கரிமக் காலச் சோதனைக்கு உட்படுத்தியதில், அது உலகின் மிகப் பழைய கப்பல் என்பது தெரியவந்துள்ளது.
பக்கவாட்டில் சரிந்தவாறு உள்ள இந்த கப்பலின் பாய்மரமும்(Mast) சுக்கானும்கூட(Rudder) தற்போது பாழடையாமல் அப்படியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலின் 2கிமி ஆழத்தில், கடலில் ஆக்ஸிஜன் இருக்காது என்பதால், மரத்தால் ஆன கப்பல் மட்கிப் போகவில்லை எனவும் ஆய்வாளர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் கப்பல் கட்டுமானம் எப்படி இருந்தது, கப்பல் பயணம் எப்படி இருந்தது என்பன போன்ற விபரங்களைப் புரிந்துகொள்ள, இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
tags :- discovery world oldest ship Black Sea
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- உலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி
- அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது
- முன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்!
- ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்
- ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்
- பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்
- முகநூல் பயனாளர்களின் தகவல் திருட்டு – முகநூல் நிறுவனத்துக்கு 12 கோடி ரூபாய் அபராதம் !
- கிரீஸில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எமது ஏனைய தளங்கள்