அரசியலில் பின்னடைவு என்று எதுவும் கிடையாது என்றும் இதுவொரு அனுபவம் என்றும் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். (no political backlashonly experience ttv dhinakaran Tamil News)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலில் பின்னடைவு என்று எதுவும் கிடையாது. இதுவொரு அனுபவம் தான்.
இதற்கு முன்னர் இரட்டை இலை சின்னம் இல்லாமல் போனது குறித்த கேள்விக்கு கூட இதுவொரு அனுபவம்தான் எதையும் நாங்கள் எதிர்கொள்வோம் எனக் கூறி இருந்தேன். அதுபோல் இதுவும் ஒரு அனுபவம் தான் இதையும் எதிர்கொள்வோம்.
இதற்கு அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடனும் கலந்து ஆலோசித்து அந்த முடிவின் படி நாங்கள் செயற்படுவோம். 18 எம்.எல்.ஏக்கள் மொத்தமாக சேர்ந்து மேன்முறையீடு செய்யலாம் என்றால் மேன்முறையீடு செய்யத் தயார்.
அநேகமாக இன்று மாலை குற்றாலம் செல்வேன். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளின் இடைத் தேர்தல் மற்றைய இரண்டு தொகுதி இடைத் தேர்தலுடன் நடந்தால் மொத்தம் 20 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றிபெறுவோம். எனவே இதில் எங்களுக்கு சாதகம் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 100 வயது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது காமுகன்
- தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலமானார் ஆதரவற்ற தொழிலாளி
- இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை வாங்க இந்தியா திட்டம்
- உத்தரகாண்ட் பிரதேசத்தில் 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை
- வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழக அரச பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி முற்பணம்
- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; no political backlashonly experience ttv dhinakaran Tamil News