வேலையிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் அதிகரிப்பு

0
508
Sex harassment work cases 4000 4 years Tamil News

வேலையிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதென தனியார் பத்திரிகையொன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. (Sex harassment work cases 4000 4 years Tamil News)

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெறும் 371 வழக்குகள் மாத்திரமே இருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டு 14 ஆயிரத்து 866 உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஒப்பீடு சுமார் 3 ஆயிரத்து 907 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த வீதம் வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து டெல்லி, அரியானா மாநிலங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீடூ மூலம் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சம்பவங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Sex harassment work cases 4000 4 years Tamil News