தமிழகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலால் 04 பேர் பலி

0
549
Tamil Nadu swine flu 4 woman kills one day

தமிழகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 4 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகின்றது. (Tamil Nadu swine flu 4 woman kills one day)

தமிழகத்தில் இதற்கு முன்னர் பல்வேறு வகையான காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சிக்குன் குனியா’ காய்ச்சல் தமிழக மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் திடீரென பரவியுள்ளதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன.

தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் பன்றிக் காய்ச்சல் வைரசின் வீரியம் குறையவில்லை. அது கடும் தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் ஒரேநாளில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 4 பெண்களின் உயிரிழந்ததுடன், மதுரையில் 2 பெண்களும், நாகர்கோவில், விழுப்புரத்தில் 2 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Tamil Nadu swine flu 4 woman kills one day