இந்து மதத்தை புறம்தள்ளிவிட்டு எவரும் அரசியல் நடத்த முடியாது

0
509
No one can hold politics Hindu religion

இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பாரதீய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். (No one can hold politics Hindu religion)

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு விஜயம் செய்த போது, அவர் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறுக்குத்துறை படித்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடி வழிபாடு நடத்திய பின்னர் அவர் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 144 ஆண்டுகளுக்கு பின்னர் மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. உள்ளூர் மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

விழாவுக்கு பொலிஸார் சிறந்த முறையில் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதேபோன்று அரசும் படித்துறை பகுதியில் தேவையான பணிகளை செய்துள்ளது.

மகா புஷ்கர விழாவில் சுவாமி நெல்லையப்பர் தீர்த்தவாரி நடைபெறாதது ஒன்று தான் குறைவாக இருக்கின்றது. தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் எழுந்தருள வேண்டும்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும். விழா முடிவடையும் நேரத்திலாவது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.

இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. இதற்கு சபரிமலை புரட்சியும், தாமிரபரணி எழுச்சியும் எடுத்துக்காட்டு ஆகும்.

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

அவர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; No one can hold politics Hindu religion