தொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி? அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..!

0
624
pakistan vs australia 2nd test australia

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். pakistan vs australia 2nd test australia,tamil news,cricket news,Aus vs Pak,tamilnewslive.com

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 145 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள், சர்ப்ராஸ் அகமது 81 ஓட்டங்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து, 537 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ஓட்டங்களை எடுத்துள்ளது.இன்னும் இரண்டு நாள் மீதமிருக்க, ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 491 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது.

pakistan vs australia 2nd test australia

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news