ஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

0
143
Tehreekul Mujahideen terrorist killed JKs Pulwama

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்றைய தினம் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் என்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Tehreekul Mujahideen terrorist killed JKs Pulwama Tamil News Latest)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீநகரின் பதே கதல் பகுதியில் நேற்றைய தினம் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் ஒரு பொலிஸ்காரரும் உயிரிழந்துள்ளதுடன், நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Tehreekul Mujahideen terrorist killed JKs Pulwama Tamil News Latest