ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி

0
666
freedom press aiadmk regime spvelumani

அதிமுக ஆட்சியிலே தான் அதிக பத்திரிகை, ஊடக சுதந்திரமும், அனுமதியும் வழங்கப்பட்டதாக கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். (freedom press aiadmk regime spvelumani)

அவர் மேலும் தெரிவிக்கையில், கோவை நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, வீதியோரத்தில் இருந்தவர்களுக்கு 60 ஆண்டுகளாக பட்டா, வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு கீரணத்தம், அறிவொளி நகர், வெள்ளலூர் பகுதிகளில் வீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் பல பேர் உள்ளதால் அடுத்த கட்டமாக வழங்கப்படும். சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் வீதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், அந்த 54 பேருக்கு மாற்று இடம் நிச்சயமாக வழங்கப்படும்.

பேரூர் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஊடகங்களின் கமராக்கள் தாக்கப்பட்டதாக தகவல் வரவில்லை.

இருப்பினும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தான் அதிக ஊடக மற்றும் பத்திரிகை சுதந்திரம் அதிகம். நிறைய ஊடகங்களுக்கு அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளது.

திமுக ஆட்சியில் தொலைக்காட்சிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியும் எனக் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; freedom press aiadmk regime spvelumani