நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை

0
203
MK Stalin consulting volunteers Parliament

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத் தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. (MK Stalin consulting volunteers Parliament)

தி.மு.கவின் செயற்குழு கடந்த மாதம் நடந்ததில் அ.தி.மு.க அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, தமிழ் நாடு முழுவதும் 2 நாட்கள் தி.மு.கவினர் போராட்டம் நடத்திய நிலையில், தி.மு.க உயர்நிலைக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் இடம்பெற்றது.

உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி, அ.தி.மு.க. அரசை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; MK Stalin consulting volunteers Parliament