சபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி

0
493
Media bears brunt protests tempers soar around

சபரிமலை அருகே நிலக்கல், பம்பா பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடியில் ஈடுபட்டு வருகின்றனர். (Media bears brunt protests tempers soar around)

சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர்.

சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்ததுடன், அங்கு வீதி மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று மாலை ஆரம்பித்த போராட்டம் விடிய விடிய நடந்ததனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.

இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அதிகளவிலான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு பெண் பத்திரிகையாளர் வந்த காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததுடன் அவர் வந்த காரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

நிலக்கல் பகுதியில் இந்தியா டுடே பத்திரைகையின் பெண் நிருபர் மவுசமி சிங் என்பவரும் போராட்டகாரர்களால் தாக்கப்பட்டார். அவரை மீட்ட பொலிஸார் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதேபோன்று, சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால் நிலமையை கட்டுப்படுத்த பொலிஸார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Media bears brunt protests tempers soar around