முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

0
320

இன்று (16) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அவரை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். Prison Commissioner Emil Ranjan Case Sri Lanka Tamil News

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த விசாரணைகளுக்கு அமைவான இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை இதுவரை கிடைக்காமையின் காரணமாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

Tamil News Live

Tamil News Group websites