அமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

0
90
Ensuring AIADMK join AMMK DTV Dinakaran interview

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக இணைவது உறுதி என அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் கூறியுள்ளார்.Ensuring AIADMK join AMMK DTV Dinakaran interview

இன்று காலை பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, அமமுகவுடன் அதிமுக இணையாது என்றும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமமுகவில் இருப்பதாகவும், அதனால் கண்டிப்பாக இணைப்பு நடக்கும் என்றும் பதிலளித்துள்ளார்.

அதிமுகவிற்கு விரைவில் பெண் தலைமை ஏற்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், செல்லூர் ராஜு மட்டும் நன்றியோடு இருப்பதாகவும் அதனால் அவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :