சொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம்! – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது!

0
433
Rs60000 bribe land owner - Vatachalam Taluk officer arrested

விருத்தாசலத்தில் ரூ. 40,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் மற்றும் அவரின் கார் டிரைவர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.Rs60000 bribe land owner – Vatachalam Taluk officer arrested

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துகூடல் மேல்பாதி தோப்பு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் செல்வம். இவர், தனது நிலத்தில் இருந்து மண் எடுத்துக் குவித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

பின்னர், ரூ. 60,000 பேரம் முடிந்து, முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், மீதமுள்ள ரூ.40,000 ஆயிரத்தைக் கேட்டு செல்வத்துக்கு டார்ச்சர் தரப்பட்டுள்ளது.

மேலும், பணம் தராவிட்டால் மண் திருடிய குற்றத்திற்காகக் கைதுசெய்வதாகவும் வட்டாட்சியர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த செல்வம், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, வட்டாட்சியர் ஸ்ரீதரனை ஆதாரத்துடன் கைது செய்யத் திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார், செல்வத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தனுப்பினர்.

அதன்படி இன்று, செல்வம் வட்டாட்சியர் ஸ்ரீதரனிடம் ரூ. 40,000 லஞ்சம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஸ்ரீதரனையும், அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் கந்தசாமியையும் கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வட்டாட்சியராக இருந்த விஸ்வநாதன், பட்டா மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :