உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க

0
150
lasith malinga picked 2019 world cup srilanka england odi series

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குகொண்டு விளையாட தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீசசாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். lasith malinga picked 2019 world cup srilanka england odi series,tamil cricket news,cricket updates, today tamilnews.com

சுமார் ஒன்றரை வருடகால இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் பங்குகொண்டு வருகிறார்.இந்த நிலையில், நேற்று இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன்மூலம், மீண்டும் அவரது சிறப்புத் தன்மை வெளிப்பட்டுள்ளதாக கிரிக்கட் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இதேவேளை கடந்த மாதம் இடம்பெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடர் மற்றும் நேற்றைய போட்டி என்பனவற்றில் அவரது பந்தவீச்சு வேகம் மணிக்கு 140 கிலோமீற்றராக இருந்துள்ளது.

எனினும் மீண்டும் அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்குகொள்ள வந்துள்ள நிலையில் நான்கு போட்டிகளில் 10 விக்கட்டுக்களை மட்டுமே கைப்பற்றியிருந்தார்.இந்த நிலையில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்வுக்குழு தம்மை அணியிலிருந்து நீக்கலாம் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தமக்கு விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டும்பட்சத்தில் அதுவே தமது இறுதி உலகக் கிண்ண போட்டியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே அந்தப் போட்டியில் தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் முழுத்திறைமையையும் வெளிப்படுத்துவதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன?

lasith malinga picked 2019 world cup srilanka england odi series

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news