சத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்..! – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..!

0
441
Fear Shatrughan Sinha - Modi goes Odisha india tamil news

2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.Fear Shatrughan Sinha – Modi goes Odisha india tamil news

இவற்றில், வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார்.

2019 தேர்தலிலும் இந்த தொகுதியிலேயே போட்டியிடுவது அவரது திட்டமாக இருந்தது.

2014 :

ஆனால் அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீது, குஜராத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், வாரணாசியில் மோடிக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசி தொகுதியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடிக்கு இது புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2019 தேர்தலில் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று இப்போதே எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தைத் துவங்கி இருப்பதும், இங்கு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சமாஜ்வாதி கட்சி சார்பில் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார் என்ற செய்திகளும் மோடியை கலக்கம் அடையச் செய்துள்ளன. சத்ருகன் சின்ஹாவும், வாரணாசியில் தான் போட்டியிடுவதை ஆர்வமாக உறுதி செய்துள்ளார்.

2019 :

வாரணாசியில் மோடியை எதிர்த்து நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிட்டால் அது பாஜக-வுக்கு கடும் சவாலாக இருக்கும்.

இத்தொகுதியில் வசிக்கும் “சாயத்ஸ்” சமூக மக்கள் சத்ருகன் சின்ஹாவுக்கு வலுவாக கைகொடுப்பார்கள் என்று உளவுத்துறையும் மோடியை எச்சரித்துள்ளது.

இதனால், மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு பிரதமர் மோடி தற்போது வந்திருப்பதாகவும், ஒடிசா மாநிலத்தில் இந்துக்கள் அதிகம் நிறைந்த புரி தொகுதியில் போட்டியிடுவதே தனக்கு பாதுகாப்பானது என்று மோடி கருதுவதாகவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :