பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா? – ஆவேசமான நடிகை ரேவதி!~

0
506
right damaged actress club? - Angry actress Revathi

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரம், சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.right damaged actress club? – Angry actress Revathi

மலையாள நடிகைகளின் கூட்டமைப்பான ‘விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ்’ (wcc) சார்பில், நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீனா கல்லிங்கல், அஞ்சலி மேனன், ரம்யா நம்பீசன், பத்மபிரியா உள்ளிட்டோர் இன்று கறுப்பு ஆடை அணிந்து கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நடிகை ரேவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நான் உறுப்பினராக உள்ளேன்.

ஆனால், இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்ததில்லை. நடிகர் திலகன் விவகாரம் வந்த சமயத்தில், செயற்குழுவில் தீர்மானம் எடுத்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட நடிகை விவகாரத்தில், பொதுக்குழுவில் தீர்மானம் எடுக்கலாம் என்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகளுக்காவது சினிமா தொழிலில் பாதுகாப்பு வேண்டும். எனவேதான், பாதிக்கப்பட்ட நடிகை தைரியமாகப் போராடுகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட நடிகர், அம்மா சங்கத்தின் உள்ளேயும், பாதிப்புக்குள்ளான நடிகை, சங்கத்திற்கு வெளியேயும் இருப்பதுதான் நீதியா?” என ஆவேசமானார்.

நடிகை பத்மபிரியா, “நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளான பிறகு நடந்த முதல் செயற்குழுக் கூட்டத்தில், நடிகர் திலீபை சங்கத்தைவிட்டு நீக்குவதாகக் கூறியிருந்தார்கள்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கும் சங்கம், பாதிக்கப்பட்ட நடிகையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அந்த நடிகர் ராஜினாமா செய்யவில்லை, நீங்களும் வெளியேற்றவில்லை.

எங்களை ஏமாற்றுவதுதான் உங்கள் நோக்கமா” என கேள்வி எழுப்பினார்.

நடிகை பார்வதி, “அம்மா சங்கத்தில் இருந்து வெளியேறுவதற்காக நான் ராஜினாமா கடிதம் தயாராக்கி வைத்திருந்தேன்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏதாவது கூறவேண்டியது இருந்தால், அவசர கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்வதாக இடைவேளை பாபு கூறியிருந்தார்.

அதனால்தான் ராஜினாமா முடிவை கைவிட்டுவிட்டு, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்குச் சென்றேன்.

மொத்தம் 40 நிமிடம் நடந்த கூட்டத்தில், நான் கெஞ்சிக் கேட்டும் என்னை பேச அனுமதிக்கவில்லை” என்றார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :