புதுச்சேரி முதலமைச்சர் குற்றசாட்டுக்கு குறித்து கிரண் பேடி பதில் தாக்கு..!

0
467
Puducherry Chief Minister accused scandal - Kiran Bedi india tamil news

புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.Puducherry Chief Minister accused scandal – Kiran Bedi india tamil news

துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சையாக வசூலித்து, சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

துணை நிலை ஆளுநர் அலுவலக ஊழியர்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியை வசூலிக்க அதிகாரமில்லை என்று கூறிய அவர், இந்த ஊழலுக்கு கிரண் பேடி பொறுப்பேற்க வலியுறுத்தினார்.

சி.எஸ்.ஆர் நிதி கொடுக்க பல்வேறு தரப்பினரும் மிரட்டப்படுவதாகவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

பருவமழையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகை சார்பில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 84 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர்நிலைகள் தூர்வாரபட்டதாகத் தெரிவித்த அவர், இந்த பணிகளை மேற்கொள்ள சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகை பணமோ அல்லது ஒரு காசோலையோ கூட பெறவில்லை என்றார்.

நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்ததாரர்களுடன் இணைத்து பணிகள் நடத்தப்பட்டதாகத் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி சுற்றுவாட்டாரத்தில் உள்ள 84 நீர்த் தேக்கத் தொட்டிகள் 600 குளங்களில் பெரும்பாலானவற்றை தூர்வார கடந்த 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டிவந்ததாலேயே ஆளுநர் மாளிகை நடவடிக்கையில் இறங்கியதாகவும் அவர் கூறினார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :