சபரிமலை வரும் பெண்கள் 2 துண்டா வெட்ட வேண்டும்! – பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு!

0
84
Women come Sabarimala cut 2pieces Popular actor's controversial speech

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் உள் நுழையும் பெண்களை 2 துண்டாக வெட்டி எறிய வேண்டும் என பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளதி தெரிவித்துள்ளார்.Women come Sabarimala cut 2pieces Popular actor’s controversial speech

சபரிமலை கோவில் உள் நுழையும் பெண்களை 2 துண்டாக வெட்டி ஒரு பாதியை டெல்லிக்கும், மற்றொரு பாதியை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என என பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளதி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.

உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போராட்டத்தில் சில பெண்கள் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை கேவிலில் அனுமதிக்கப்படும் பெண்களை 2 துண்ணாடக வெட்டியெறிய வேண்டும் என நடிகர் கொல்லம் துளதி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :