நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்

0
206
Rahul Gandhis Dig BJP Nitin Gadkari Video

நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறியமை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஏளனம் செய்துள்ளார். (Rahul Gandhis Dig BJP Nitin Gadkari Video)

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்தோம்.

ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்றிருக்க வேண்டியது இல்லை.

ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி விட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

இப்போதைக்கு அதனை பற்றி சிரித்துகொண்டே கடந்து செல்கிறோம் என்று அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் மராத்தி மொழியில் பேசும் காளொணியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் குறித்த காணொளியை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளாலேயே பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் நிதின்கட்காரி கூறிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பகிர்ந்து நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் பல கனவுகளை உருவாக்கி அரசாங்கத்தை அமைத்து பேராசையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rahul Gandhis Dig BJP Nitin Gadkari Video