ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்

0
512
Nirmala Seetharaman alleged congress correption

ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாதது போன்று அமைதியாக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். (Nirmala Seetharaman alleged congress correption)

காங்கிரஸ் கட்சி கொடுத்த 48 ஆண்டு கால ஆட்சியை 48 மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் வணிகர் தாமரை மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இடம்பெற்றது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். இராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டொக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மாநாட்டில், தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தை முதலமைச்சர் மீண்டும் செயற்படுத்த வேண்டும், பெற்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்கள் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்தது போன்று மாநில அரசும் ‘வற்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருக்கின்றது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருகின்றார். காங்கிரஸ் ஆட்சியில் கடன் 3 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கடன் பெற்று ஓடியவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கின்றது. இதனை 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு நரேந்திர மோடி முயற்சி எடுத்து வருகின்றார்.

மத்திய அரசு செயற்படுத்திய திட்டங்களை வணிகர்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும், மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழகத்திலும் மாறுதல் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Nirmala Seetharaman alleged congress correption