நம்பி நாராயணனிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் கேரள முதல்வர்!

0
441
Kerala Chief Minister Rs50 lakh Nambi Narayan india tamil news

திருவனந்தபுரம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.Kerala Chief Minister Rs50 lakh Nambi Narayan india tamil news

1994-ல் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறைத்தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி அன்று வழங்கியது.

இதில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்திய விண்வெளி விஞ்ஞான தொழில்நுட்பத்தின் முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஆர்பிட் ஆப் மெமரீஸ் என்ற தனது சுயசரிதை நூலில் நம்பி நாராயணன் வெளிப்படையாக பல உண்மைகளை வெளியிட்டிருந்தார்.

அதில் தான் நிரபராதி என்றும் தான் கைது செய்யப்பட்டதில் முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கரங்கள் பின்னிருந்து செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தன்னைக் கைது செய்தவர்களை விசாரிக்கும்படியும் உரிய தண்டனை பெற்றுத்தரும்படியும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை சென்ற மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை உறுதி செய்து அவரைக் கைது செய்தது தேவையற்றது எனவும் கூறி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் இழப்பீட்டு தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கேரள முதல்வர் வழங்கினார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :