டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேரில் முன்னிலை; கைதுசெய்ய தடை நீடிப்பு

0
530
P.Chidambaram arrives Delhis Patiala House Court

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான ப. சிதம்பரத்தை கைதுசெய்ய தடை நீடிக்கப்பட்டுள்ளது. (P.Chidambaram arrives Delhis Patiala House Court)

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை செய்து வருவதுடன், இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது.

இதுகுறித்து பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் ஆய்வு நடத்தியதுடன், ஏர்செல் மேக்சிஸ் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப் பரிவர்த்தனை ஆணையகம் தெரிவித்தது.

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இயங்கும் தீர்ப்பாய அதிகாரி துஷார் விஷா உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் பிணை கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதுடன், டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் முன் பிணை கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனுத் தாக்கல் செய்ததுடன், இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான போது, வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்ய நீதிமன்றம் தடை நீடிப்பு செய்தது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; P.Chidambaram arrives Delhis Patiala House Court