ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! – இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த 16 வயது வீராங்கனை!

0
431
India's first medal judo - 16-year-old girl achieved Olympics

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.India’s first medal judo – 16-year-old girl achieved Olympics

இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் 69 பேர் 13 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த துஷர் மானே வெள்ளி வென்றார். இன்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தாபாபி தேவி வெள்ளி வென்றார்.

16 வயதான தாபாபி தேவி இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத்தின் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

தகுதிச் சுற்றில் கொசாவாவின் எர்சாவை வென்ற அவர், அரையிறுதியில் குரோஷியாவின் விக்டோர்ஜியாவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் வெனிசுலாவை சேர்ந்த மரியா ஜிம்னன்ஸை எதிர் கொண்டார். 11 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் தாபாபியை எளிதாக வென்றார் மரியா. இதனால், தாபாபி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2017-ல் ஆசிய கேடட் சாம்பியனான தாபாபி இந்த ஆண்டிலும் தங்கம் வென்றார். மேலும், ஜூனியர் ஆசியக் கோப்பையையும் வென்றார்.

ஜூடோ கூட்டமைப்பின்படி கண்டினன்ட்டல் அளவில் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே வீராங்கனை ஆவார்.

மேலும், உலக அரங்கில் ஜூடோ பிரிவில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இப்படி பல சாதனைகளைப் பெற்றுள்ளார் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாபாபி தேவி.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :