வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது!

0
475
100 acres agricultural land drowned water india tamil news

நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டம்,நெடுவாசல் கிராமத்தில் வெள்ளநீர் வடிகால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடிய வழியின்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.100 acres agricultural land drowned water india tamil news

நெடுவாசல் கிராமத்தில் மேலக்கரை வடிகால் வாய்க்கால் வழியாக தான் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக சில நபர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் வெள்ளநீர் வடிய வழியின்றி ஒட்டு மொத்த விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி கிடக்கிறது.

இதுகுறித்து நெடுவாசல் விவசாயிகள் கூறுகையில், பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் சில தினங்களாக பெய்த மழையால் நடவு செய்யப்பட்ட நாற்றாங்கால், தயார் நிலையில் இருந்த நாற்றுகள் என அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி விட்டன.

இனியாவது அதிகாரி கள் வாய்க்காலில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார நடவடி க்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :