சென்னையில் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது!

0
132
month old-baby opening door wind - fuck cheetah india tamil news

சென்னை அருகே பச்சிளம் குழந்தையை கொன்று தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.Mother arrested killing child Chennai india tamil news

வேளச்சேரி நூறு அடி சாலை அருகே வெங்கண்ணா, உமா தம்பதியினர் வசித்து வந்தனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்னர், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

மார்பகத்தில் ஏற்பட்ட தீராத வலி காரணமாக குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் உமா அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மருந்து மாத்திரை உட்கொண்டு தாய் பால் கொடுத்தால், குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று கணவர் கூறியதால், வலிக்கு உரிய மருந்து மாத்திரைகளையும் உமா எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டின் அருகில் உள்ள ஏரியில் குழந்தையை வீசி கொலை செய்துவிட்டு யாரோ கடத்தியதாக நாடகமாடியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் தாய் உமாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், மார்பக வலி காரணமாக குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், தாய் உமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :