மீண்டும் வன்முறைக்கு பாதையிடப்படுகின்றது! சம்பந்தன் ஆவேசம்!

0
363

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்ற சிறிலங்கா அரசாங்கம், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையின்றி மிகவும் மெதுவாக செயற்படுவதாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். TNA Sambanthan Latest Statement Sri Lanka Tamil News

கொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் , பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே சம்பந்தன் இந்த கருத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

“போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.காணாமல் போனோருக்கான பணியகம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியம்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை. யாரும் எதையும் மறைக்க முடியாது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்படுவது முக்கியம் என சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

Tamil News Live

Tamil News Group websites