தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு

0
599
Tamil Nadu Kerala Lakshadweep expected Continue heavy rain

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Tamil Nadu Kerala Lakshadweep expected Continue heavy rain)

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருவதுடன், தமிழகம் மற்றும் புதுவையில் 8 ஆம் திகதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

8 ஆம் திகதி வட கிழக்கு பருவமழை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7 ஆம் திகதி அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Tamil Nadu Kerala Lakshadweep expected Continue heavy rain