தூத்துக்குடியில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்

0
574
searching operation rescue Thoothukudi fishermen

தூத்துக்குடி கடலில் காணாமல் போன 18 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (searching operation rescue Thoothukudi fishermen)

தென் தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது.

இன்றும் நாளையும் மிக கன மழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2 நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப தகவல் கொடுக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மிக்கேல்ராஜ், ஜெகன், கில்பட், ஜோசப், குழந்தைராஜ், ராஜ், வல்லவன், வசந்த், ராமர் டால்வின் ஆகிய 10 பேரும்,

பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் விஜி, சுதாகர், அந்தோணி, விக்கி, அன்சாரி, செல்வராஜ், ஜோபின், எபிஸ்டன் ஆகிய 8 மீனவர்களும் கடந்த 1 ஆம் திகதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அவர்களை மற்றைய மீனவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால் அந்த 2 படகுகளையும் நேற்றிரவு வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் சற்று அதிக தொலைவிற்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஆனாலும், புயல் எச்சரிக்கை நேரத்தில் 18 மீனவர்கள் காணாமல் போன உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கடலோர காவற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடனே அவர்கள் ரோந்து கப்பலில் சென்று மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக கடலில் இருக்கும் 18 மீனவர்கள் கதி என்ன? எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; searching operation rescue Thoothukudi fishermen