கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக்கு தடை விதிக்க மனு!

0
113
karunas's forefather's petition ban burglary india tamil news

சாதிப் பிரிவினையை தூண்டும்வகையில் பேசி வரும் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்க கோரி, அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.karunas’s forefather’s petition ban burglary india tamil news

இதுகுறித்து அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மைக்காலமாக பிற சமூகத்தினரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டினர்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தி, தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக அவர்கள் சாடினர்.

எனவே, கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்குமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவிலும், காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளித்திருப்பதாக அகில இந்திய அகமுடையார் மகாசபையினர் தெரிவித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :