மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

0
422
trade unions protest central-state governments india tamil news

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய-மாநில தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர் போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் புதனன்று (அக்.3) தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.trade unions protest central-state governments india tamil news

இக்கூட்டத்தில் வே.சுப்புராமன், மு.சண்முகம், கி.நடராசன் (தொமுச), ஜி.சுகுமாறன், ஆறுமுக நயினார் (சிஐடியு), வி.சி.முனுசாமி (ஐ.என்.டி.யு.சி), டி.எம்.மூர்த்தி, n ஜ.இலட்சுமணன் (ஏ.ஐ.டி.யு.சி), மு.சுப்பிரமணியம், மா.சுப்பிரமணியபிள்ளை (எச்.எம்.எஸ்), ஏ.எஸ்.குமார் (ஏஐ.சி.சி.டி.யு), இராம.முத்துக்குமார் (பாட்டாளி தொழிற்சங்கம்), பி.வேணுராம் (தே.மு.தொ.ச), வி.ஜார்ஜ், ஆறுமுகம் (எம்.எல்.எப்), அர்சுணன், ஆ.வேலு (எல்.எல்.எப்), திருமலைசாமி, ப.பத்மநாபன் (பணியாளர் சம்மேளனம்), இரா.குசேலர், துரைராஜ் (உ.ம.மா) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தொமுச தலைவர் மு.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

மக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

பொதுத்துறையின் சாதனைகளை கொச்சைப்படுத்தும் அமைச்சர்களின் பேச்சும் தொழிலாளர்களையும், தொழிற்சங்க இயக்கங்களை சிறுமைப்படுத்துவதை கண்டிக்கிறோம்.

ஒப்பந்த முறையையும், அவுட்சோர்ஸிங் பணிகளையும் கைவிட வேண்டும். பிக்சட் டேர்ம் எம்ளாய்மெண்ட் முறையை முழுமையாக கைவிட வேண்டும்.

தமிழகத்தில் முத்தரப்பு குழுக்களை அமைத்து உடனடியாக கூட்ட வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பேணிப்பாதுகாக்க சங்கம் வைத்தால் நிர்வாகங்களே வன்முறையை தூண்டுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யமஹா, எம்எஸ்ஐ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் நடைபெறும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

போக்குவரத்து, மின்சாரம்,நுகர்பொருள் வாணிபக்கழகம், அமைப்புசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்தும் கூட்டுறவுத் துறை ஊழியர்களை கொத்தடிமையாக நடத்துவதைக் கண்டித்தும் வரும் 16 ஆம் தேதி மாவட்ட அளவில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஒரு ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினாலும் ஒத்த கருத்தை உருவாக்கி அனைத்து இயக்கங்களில் பங்கேற்று ஆதரவு தருவதென்றும் முடிவு செய்துள்ளோம்.
மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத மக்கள்விரோத கொள்கைகளைக் கண்டித்து, 2019 ஜனவரி 8,9தேதிகளில் பொது வேலை நிறுத்தத்திற்கு தில்லியியில நடந்த அனைத்துத் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

அதனை ஏற்று தமிழகத்தில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காண்டிராக்ட் முறை, பிக்ஸட் டெர்ம் வேலைமுறை, நீம் ஆகியவற்றைக் கைவிடுதல், அனைவருக்கும் குறைந்தது ரூ.6ஆயிரத்திற்கு குறையாத ஓய்வூதியம், மாதம் ரு.21ஆயிரத்திற்கு குறையாத அகவிலைப்படியுடன் கூடிய ஊதியம், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை தொழிலாளர்களுக்கு விளக்க லட்சக்கணக்கில் துண்டுப்பிரசுரங்கள் சுவரொட்டிகள் உள்ளிட்ட பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த ஆயுத்த மாநாடுகள் இதற்காக மாவட்ட அளவிலான அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளை அக்டோபர், நவம்பரில் நடத்தவும் விரிவான மாவட்ட பிரச்சார இயக்கங்களை டிசம்பர் 1 முதல் 15 வரை நடத்தவும், மாநில ஆய்த்த மாநாடுகளை திருச்சியிலும், சென்னையிலும் டிசம்பர் கடைசி வாரத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என அறிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :