டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

0
551
Rupee Hits New AllTime Low 7377 Dollar

டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. (Rupee Hits New AllTime Low 7377 Dollar)

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் மசகு எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. (Rupee Hits New AllTime Low 7377 Dollar)

இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றது.

கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்ததுடன், ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.

இதனையடுத்து, ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி ஆரம்பித்துள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தமை வரலாற்றில் இல்லாத சரிவாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rupee Hits New AllTime Low 7377 Dollar