சத்தீஷ்கரில் மூன்று மாவோய்ஸ்ட் ஆயுததாரிகள் சுட்டுக்கொலை

0
195
Three Naxals killed encounter Chhattisgarh arms

சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் மூன்று மாவோய்ஸ்ட் ஆயுததாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். (Three Naxals killed encounter Chhattisgarh arms)

சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுக்மாவில் உள்ள முலேர் என்ற கிராமம் அருகேயுள்ள வனப் பகுதியில் மாவோய்ஸ்ட் ஆயுததாரிகளின் நடமாட்டம் இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மாவோயிஸ்டுகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

துப்பாக்கிச் சண்டை முடிவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மூன்று மாவோயிஸ்டுகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து வெடி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.

வனப்பகுதிக்குள் இன்னும் தீவிர தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Three Naxals killed encounter Chhattisgarh arms