இராமேஸ்வர மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

0
208
Rameswaram Pamban fishermen strike today start

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இராமேசுவரம் மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர். (Rameswaram Pamban fishermen strike today start)

டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பது என மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழக மீனவர் சங்க செயலாளர் ஜேசுராஜா தலைமையில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 03 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்றைய தினம் இராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்ததனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.

மீனவர்களின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 8 ஆம் திகதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rameswaram Pamban fishermen strike today start