கையடக்கத் தொலைபேசியை விழுங்கிய சிறைக்கைதி; வயிற்றுவலியால் அவதி

0
542
presidency jail prisoner swallows mobile phone

சிறைச்சாலை சோதனையின் போது அதிகாரிகளுக்கு பயந்து கையடக்கத் தொலைபேசியை விழுங்கிய சிறைக்கைதி ஒருவர் வயிற்றுவலியால் துடிதுடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. (presidency jail prisoner swallows mobile phone)

கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் ராமசந்திரா என்ற கைதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

இவருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் இவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறைச்சாலை அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது ராமசந்திரா தன்னிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை மறைப்பதற்காக அதனை விழுங்கியுள்ளார். இதனை அடுத்தே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறைக்கைதி கையடக்கத் தொலைபேசியை விழுங்கியது எக்ஸ்ரேவில் தெரியவந்துள்ள நிலையில், அவர் அங்கிருந்து எம்.ஆர். பாங்கூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

7 சென்றி மீற்றர் அளவுள்ள கையடக்கத் தொலைபேசியை விழுங்கியுள்ளார் என்பது எக்ஸ்ரே பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குடல் இயக்கம் வழியாக கையடக்கத் தொலைபேசியை வெளியில் எடுகப்பதற்கு வைத்தியர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது முடியாமல் போகும் பட்சத்தில் கைதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; presidency jail prisoner swallows mobile phone