அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்

0
36
US fired super market 2 injured

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். US fired super market 2 injured

பொலிஸாரும் அவசர உதவிக்குழுவினரும் சூப்பர் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் கருப்பு சட்டை அணிந்த ஒரு நபரை தேடி வருகிறார்கள்.

அதே நேரத்தில் உள்ளூர் ஊடகங்கள், பலர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளன. அதேபோல் சம்பவம் நடந்தபோது சூப்பர் மார்க்கெட்டிலிருந்த வாடிக்கையாளர்கள்,இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்கள், ஆனால் பொலிஸார் இதை உறுதி செய்யவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இன்னும் வெளியே நடமாடுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

tags :- US fired super market 2 injured

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்