இன்று முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!

0
453

திறை­சே­ரியின் ஆலோ­ச­னையின் பிர­காரம் ரயில் கட்டணங்கள் இன்று முதல் 15 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக புகை­யி­ரத திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. New Train Transport Fare sri lanka Tamil News Today

ஆரம்பக் கட்­ட­ணத்தில் பய­ணிக்கும் தூரத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனவும் எனினும் ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அதாவது 3 ஆம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட ஆரம்­பக்­கட்­ட­ண­மான 10 ரூபா, 2 ஆம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட 20 ரூபா மற்றும் முதலாம் வகுப்­புக்­காக அற­வி­டப்­பட்ட 40 ரூபா ஆகி­ய­வற்றில் எந்த மாற்­றங்­களும் இடம்­பெ­றாது. என்­றாலும் அடிப்­ப­டைக்­கட்­ட­ணத்தில் இது­வரை பய­ணித்த தூரம் தற்­போது குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன் படி , 10 ரூபா­வுக்கு பய­ணிக்க முடி­யு­மா­கவிருந்த 9 கிலோ மீற்றர் தூரம் தற்­போது 7 கிலோ மீற்­ற­ராக குறைக்­கப்­பட்­டுள்­ளது. அனு­ம­திச்­சீட்டு கட்­ட­ணத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதன் மூலம் பரு­வச்­சீட்டு கட்­ட­ணத்­திலும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­போதும் பரு­வச்­சீட்­டுக்­காக இது­வரை அற­வி­டப்­பட்டு வந்த வீதத்தில் எந்த மாற்றமும் இடம்­பெ­றாது.

அதன் பிர­காரம் அரச ஊழி­யர்­களின் பரு­வச்­சீட்­டுக்­காக அற­வி­டப்­படும் கட்­ட­ண­மா­னது ஒரு­முறை பய­ணிக்கும் பய­ணச்­சீட்­டின் பெறு­ம­தியில் 9 மடங்­காகும். தனியார் துறை ஊழி­யர்­களின் பரு­வச்­சீட்­டுக்­காக அற­வி­டப்­படும் கட்­ட­ண­மா­னது ஒரு­முறை பய­ணிக்கும் பய­ணச்­சீட்டின் பெறு­ம­தியில் 24 மடங்­காகும்.

திறைசேரி மற்றும் போக்குவரத்து அமைச்சு அனுமதியுடன் இந்த கட்டண திருத்தம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

Tamil News Live

Tamil News Group websites