காந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது?

0
470
mahathma gandhi whose shoot 4th bullet? india tamil news

காந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது? 70 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெரும் கொலை வழக்கு குறித்து சில தகவல்களை காணலாம்…mahathma gandhi whose shoot 4th bullet? india tamil news

சரியாக 70 வருடங்களுக்கு முன்பு, 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி மாலை இந்திய வரலாற்றில் மறக்க முடியாத துயர சம்பவம் நடந்தேறியது.

உலகெங்கும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற ஆயுதம் ஏந்திய போர் மட்டுமே ஒரே வழி என்றிருந்த பாதையை மாற்றியமைத்து அகிம்சை வழியில் போராடியும் வெற்றி பெறலாம் என்று புதிய பாதை காட்டிய காந்தியை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தினம் தான் ஜனவரி 30-1948.

இப்போது காந்தி சமாதியாக இருந்து வரும் அன்றைய பிர்லா மாளிகை வளாகத்தில் தான் பெரும் கூட்டத்தின் நடுவே தேசப்பிதா எனப் போற்றப்படும் காந்தியடிகள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

அது எப்போதும் போல காந்தி பிரார்த்தனை செய்யும் மாலை நேரமாகும். அவர் அப்போது தான் சில அடிகள் எடுத்து வைத்து பிரார்த்தனை செய்யும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் பாதையின் குறுக்கே வந்து நின்ற நாதுராம் விநாயக் கோட்சே தனது கையில் இருந்த பிஸ்டல் மூலமாக மூன்று முறை காந்தியை நோக்கி சுட்ட, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தவர் அடுத்த நொடியே உயிரிழந்தார்.

கோட்சே காந்தியை மூன்று முறை தான் சுட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படித் தான் நீதிமன்றத்திலும் கூறப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் காந்தி உடலை துளைத்தது நான்கு புல்லட்டுகள். நாதுராம் விநாயக் கோட்சே துப்பாக்கியில் இருந்தது வெறும் 3 புல்லட்டுகள் என்றால் காந்தியின் உடலை துளைத்த அந்த 4வது தோட்டா எங்கிருந்து வந்தது? அதை சுட்டது யார்? போன்ற விவாதங்கள் எழத் தொடங்கின.

இதுவரை காந்தியை கொலை செய்தது ஒருநபர் என்றும், அவர் நாதுராம் கோட்சே என்றுமே அறியப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு பங்கஜ் பத்னிஸ் என்ற ஆராய்ச்சியாளர் தொடுத்த வழக்கின் மூலமாக தான் காந்தி உடலை துளைத்தது நான்கு புல்லட்டுகள் என்றும், அதில் மூன்று மட்டுமே நாதுராம் விநாயக் கோட்சேவுடையது என்றும் உண்மைகள் வெளியாக தொடங்கின.

இந்த வழக்கை தொடர்ந்த பங்கஜ், அபினவ் பாரத் என்ற அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் ஆய்வாளார் ஆவார்.

இவர் காந்தியின் உடலை நான்காவது புல்லட் துளைத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், அது கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து பாயவில்லை என்பதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக தெளிவாக கூறியுள்ளார்.

காந்தி நான்கு புல்லட்டுகள் பாய்ந்து தான் இறந்தார் என்பதற்கு அப்போது வெளியான நான்கு செய்தி தாள்களின் ஆதாரங்கள் வலுவாக உள்ளன. அவற்றில் தெள்ளத் தெளிவாக நான்கு புல்லட் என்று குறிப்பிட்டு தலைப்பு வைத்துள்ளனர்.

மேலும் காந்தி குண்டடி பட்டி இறந்ததை நேரில் பார்த்த சாட்சிகளும் அவர் மீது 4 தோட்டாக்கள் பாய்ந்ததை பார்த்ததாக சாட்சியத்தில் கூறியிருப்பதும் இதற்கான மற்றொரு ஆதாரமாக இருக்கிறது.

இவற்றிற்கு எல்லாம் மேலாக காந்தியின் உடலை நான்கு தோட்டாக்கள் துளைத்த புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

பங்கஜ் அளிக்கும் பல்வேறு ஆதாரங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது, காந்தியின் நெருங்கிய மருமகள் உறவைச் சார்ந்த மானுபென் காந்தி என்பவர் எழுதிய டைரி குறிப்பில் இருக்கும் தகவல் ஆகும்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் 2 தோட்டாக்களும், காந்தியின் உடலில் சிக்கியிருந்த ஒரு தோட்டாவை அவரது சாம்பலில் இருந்தும் எடுத்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஆனால், காந்தியை சுட்ட பிறகு, இறுதி சடங்குக்கு அவரை குளிப்பாட்ட உடல் கொடுக்கப்பட்ட போது அவரது மேலாடையில் ஒரு தோட்டா சிக்கி இருந்தது என அந்த டைரி குறிப்பில் தெரிவிக்கிறார் மானுபென் காந்தி.

மேலும் காந்தியை கோட்சே 3 முறை தான் சுட்டார் என்றால், அந்த நான்காவது தோட்டா யாருடையது என்ற கேள்வி அப்போதைய செய்தித்தாள்களில் வராமல் போனதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளன.

அதுமட்டுமின்றி தி கார்டியன் என்ற செய்தித்தாளில் ஜனவரி 31, 1948ல் வெளியான செய்தியில் காந்தியை மூன்று முறை சுட்ட பிறகு, கோட்சே தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இதைத் தவிர கோட்சே தற்கொலைக்கு முயன்றதாக வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :