மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை

0
250
Government college professor attack her husband

பேராசிரியர் ஒருவரை அரிவாளால் வெட்டிய கணவர் கர்நாடகாவுக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில், புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். (Government college professor attack her husband)

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே கனகபுரத்தைச் சேர்ந்த சட்டத்தரணியான 40 வயதுடைய டால்டன் செல்வ எட்வர்டின் 33 வயதுடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற நாளன்றும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எட்வர்ட், ஷைனியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த ஷைனியை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். இதனிடையே எட்வர்ட் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

தலைமறைவாக இருந்த அவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா அருகில் எலியூர் பகுதியில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் உள்ளதாக தகவல் பொலிஸாருக்கு கிடைத்தது.

இந்த சடலத்தின் அருகில் பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தது. அந்த முகவரியை விசாரித்ததில் இறந்தவர் எட்வர்ட் என்பது தெரியவந்தது.

மனைவியை வெட்டியதால் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு பயந்து எட்வர்ட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Government college professor attack her husband