உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு

0
393
Delhi PM Modi Uzbek President witness exchange

உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது. (Delhi PM Modi Uzbek President witness exchange)

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய தலைநகர் டெல்லியில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனையடுத்து, உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு வாய்ந்த நண்பர் என உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதியை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் நடைபெற்ற ஆலோசனை இரு நாடுகளின் உறவுக்கு நல்வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து உரையாற்றிய உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்காட், பழமையான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்திய மக்களை தாம் மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Delhi PM Modi Uzbek President witness exchange