அரச கடன் வழங்க மறுக்கும் அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – மங்கள

0
624
Strong legal action state bank officials refusing pay state Mangala

என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆதரவு வழங்காத அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Strong legal action state bank officials refusing pay state Mangala

மாத்தறை பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

தொழில்துறையில் புதிதாக ஈடுபடுவோருக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள கடன் திட்டத்தை உரிய முறையில் வழங்குவதில் அரச வங்கி பின்வாங்குவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அமைச்சரிடம் முறையிடப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் புதிதாக கடன் பெற வரும் இளைஞர், யுவதிகளை கடன் வழங்காமல் திருப்பியனுப்பவே வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அவசியமற்ற கேள்விகளை தொடுத்து அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த புதிய கடன் திட்டத்தில் 15 லட்சத்துக்கு குறைவாக கடன் பெறுபவர்களுக்கு யாரும் பிணை நிற்கத் தேவையில்லை. எந்த வங்கியிலாவது அவ்வாறு கோருவதாயின் எமக்கு அறிவியுங்கள். அவ்வாறு கேட்டவரின் பெயர், வங்கியின் பெயர், எந்தக் கிளை என்பதை அறிவியுங்கள். என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அவசர தொடர்பு இலக்கம் 2015 ஆகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Strong legal action state bank officials refusing pay state Mangala

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி

நாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்?

வடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே! இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

Tamil News Live

Tamil News Group websites