அமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது! – பிரதமர் மோடி!

0
474
India moving ahead fast pace - Prime Minister Modi proud

நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு நமது ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.Even like peace not-leave self respect – modi india tamil news

`மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை அகில இந்திய வானொலியில் இன்று ஒலிபரப்பானது.

அப்போது, 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியத் தாக்குதலை, நேற்று நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி, ராணுவ வீரர்களின் பெருமையை நினைவு கூர்ந்ததாக தெரிவித்தார்.

அமைதியை நாம் விரும்பிய போதிலும், சுயமரியாதையையும், இறையாண்மையையும் விட்டுத்தர முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாடு முழுவதும் மத்திய அரசு கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் நெல்சன் மண்டேலா, ஜுனியர் மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையும் மோடி நினைவுகூர்ந்தார்.

அன்றைய தினத்தில் நாட்டின் சிறிய நகரங்கள் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :