இறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை! – ரமணா பாணியில் நடந்த கொடுமை!

0
485
treatment deadbody private hospital - ramana film style india tamil news

தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தந்தை இறந்த பிறகும், அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.treatment deadbody private hospital – ramana film style india tamil news

நாகப்பட்டினம் மாவட்டம், கிளியனூரைச் சேர்ந்தவர் சேகர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்தார்.

சமீபகாலமாக வயிற்று வலியால் துன்பப்பட்டுவந்த சேகருக்கு, நாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அப்பெண்டிசைட்டிஸ்’ ஆபரேஷன் செய்யப்பட்டது. மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால், இதுவரை சிகிச்சை அளித்ததற்கு 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 5 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டதாகவும், இதற்கு மேல் செலவு செய்ய வசதியில்லை எனவும் சேகரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

50 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, சேகரை அங்கிருந்து அழைத்துச்சென்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்க முடிவுசெய்து, ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சேகரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பே சேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் சேகரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சேகரின் மகன் சுபாஷ், ‘’எனது தந்தை உயிரிழந்த பிறகும்கூட, அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகப் பொய் சொல்லி, மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் பணம் பறிக்க முயன்றுள்ளது.

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை, தனியார் மருத்துவமனை தரப்பு மறுத்துள்ளது. “நாங்கள் டிஸ்சார்ஜ் செய்தபோது சேகர் உயிருடன் தான் இருந்தார்.

எங்கள் தரப்பில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை. நேற்று முன் தினம் இரவு, இவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்த்துவிட்டு சென்றார்கள். இதற்கான சி.சி.டிவி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பிரேத பரிசோதனையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :