லண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்!

0
344
France refugees rescued_by SNSM

நேற்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பா-து-கலேயின் Audinghen பகுதி கடலில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட ஆறு அகதிகள் பிராந்திய எல்லைக்கடலில் தத்தளித்த போது மீட்கப்பட்டுள்ளனர். France refugees rescued_by SNSM

சிறிய ரக துடுப்பு படகு ஒன்றில் குறித்த ஆறு அகதிகளும் கடலில் தத்தளித்தனர். அவர்களை National Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினர் மீட்டனர். இவர்கள் 26 வயதில் இருந்து 51 வயதுவரையான இரானிய குடியுரிமை கொண்ட அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 7.15 மணி அளவில் சுவாசப்பிரச்சனை காரணமாக ஆறு அகதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளை Boulogne-sur-Mer பகுதி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதுபோல் படகில் செல்ல முற்பட்டதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் 36 முயற்சிகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…!
எமது ஏனைய தளங்கள்