இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிஐசி துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்!

0
545
first time india gic deputy manager blind india tamil news

அரசுபொதுத் துறையை சேர்ந்த பொதுகாப்பீடு நிறுவனத்தில் (ஜிஐசி) இந்தியாவிலேயே முதல் முறையாக துணை மேலாளர் பதவிக்கு கோவையை சேர்ந்த ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.first time india gic deputy manager blind india tamil news

21 வயது இளைஞரான இவர் மத்திய அரசின் போட்டித் தேர்வில் லட்சக்கணக்கான போட்டியாளர்களுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி – திலகவதி தம்பதியரின் மகன் ராம்குமார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

அவரது தந்தை கூலித்தொழிலாளி. சிறு வயதிலேயே இரு கண்களிலும் பார்வை இழந்த ராம்குமார் பிரெய்லி புத்தகங்களை கொண்டே அனைத்து பாடங்களையும் கற்று பள்ளிப்படிப்பை முடித்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு இளநிலை பட்டப்படிப்பை முடித்து விட்டு அடுத்த ஒரே ஆண்டில் மத்திய அரசின் போட்டித் தேர்வை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இது பற்றி அவர் கூறும் போது, கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதை அறிந்து அதில் இணைந்தேன்.

அம்பேத்கர் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது.

வங்கித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் பிரெய்லி முறையில் இல்லை என்பதால் மையத்தில் பாடக்குறிப்புகளை அதிகமாக ஒலி வடிவில் மாற்றிக் கொடுத்தனர்.

தவிர கணினியில் அக்சசிபிளிட்டி சாஃப்ட்வேர் எனப்படும் திரைவாசிப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் அதிகம் படித்து வந்தேன்.

இதற்கிடையே வீட்டிற்கு சென்றால் ஆன்ட்ராய்டு மொபைலுக்கு ஒலி வடிவிலான பாடக்குறிப்புகள் அனுப்பிவைக்கப்படும்.வடிவங்களை உணரும் விதமாக பாடம் வடிவமைக்கப்பட்டது.

இதுபோன்ற பயிற்சிகள் தேர்வை எதிர்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இளநிலை படிப்பை முடித்து சரியாக ஒரு ஆண்டில் என்னால் போட்டி தேர்வில் வெற்றியை
எட்ட முடிந்தது. என்று கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் மையம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக போட்டித் தேர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ராம்குமார் ஸ்மார்ட் போனை லாவகமாக கையாளும் திறமை உள்ளவர். அந்த வகையில் அவரது போனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒலி வடிவ பாடக்குறிப்புகளை ராம் சரியாக பயன்படுத்திக் கொண்டார். என்று அம்பேத்கர் மையத்தின் போட்டித் தேர்வு பயிற்சியாளர் கணேஷ் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :