மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

0
391
Maldives presidentelect Solih invites PM Narendra

நடந்து முடிந்த மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (Maldives presidentelect Solih invites PM Narendra)

மாலைதீவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மாலைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.

மாலைதீவில் முன்னேற்றக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.

இதனால், இப்ராகிம் முஹமது ஷோலி மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், மாலைதீவு தேர்தலில் இப்ராகிம் முஹமது ஷோலி வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது, தனது பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு மோடிக்கு ஷோலி அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வருமாறு ஷோலிக்கு மோடி அழைப்பு விடுத்தார், மோடியின் இந்த அழைப்பை ஷோலி ஏற்றுக்கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் மரியா அஹமது திதி கூறியுள்ளார்.

மேலும், இந்தியா மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டதாக மரியா தெரிவித்தார்.

சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே பிரதமர் மோடி இதுவரை செல்லாத நாடு மாலைத்தீவு என்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு மாலைதீவுக்கு செல்ல திட்டமிட்ட மோடியின் பயணம் அந்த நாட்டின் உள்நாட்டு குழப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Maldives presidentelect Solih invites PM Narendra