கைதுக்குக் காரணம் கூவத்தூர் ரகசியம்தான்! – கருணாஸ் ஆதரவாளர்கள்!

0
524
reason arrest secret coupatur - karunas supporters india tamil news

முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாகப் பேசியது மட்டும் கருணாஸ் கைதுக்கு காரணமல்ல. இது வெறும் சாக்குதான்.reason arrest secret coupatur – karunas supporters india tamil news

இதுக்குப் பின்னால் பெரும் காரணம் ஒன்று உள்ளது.” என்கின்றனர் கருணாஸ் தரப்பினர்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவர்மீது வழக்குப் பாய்ந்தது.

இதையடுத்து கடந்த 23-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார், அதனால் கைது செய்யப்பட்டார் என்பதைவிட அவர், `கூவத்தூர் ரகசியங்கள் அடங்கிய வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’ என்று அவர் கூறியது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.

இதை இப்படியேவிட்டால், நமக்கு ஆபத்து வந்துவிடும், கருணாஸை கைது செய்து அந்த வீடியோ ஆதாரங்கள் குறித்து கேளுங்கள் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

`கருணாஸின் இந்தத் திடீர் பேச்சுக்குப் பின்னால் டி.டி.வி. தினகரன் தரப்பு இருக்கலாம்.

நம்மை மிரட்ட, கருணாஸை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உடனே இதற்கு முடிவுகட்ட வேண்டும்’ என்று கட்சியினர் அழுத்தம் தரப்பட்டது.

இதையடுத்து அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது” என்கின்றனர்.

இதனால், அதிருப்தியடைந்துள்ள கருணாஸ் தரப்பு, “முதலமைச்சர் எங்களை சீண்டிப் பார்க்கிறார். அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிடுவோம். நீதிமன்றக் காவலில் எடுத்து, ஆதாரங்களைத் தரச்சொல்லி கொடுமை செய்ய காவல்துறை திட்டமிட்டனர்.

நல்ல வேளையாக நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. அண்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்’ என்று ஆவேசமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், ஐ.பி.எல் போராட்டத்தின்போது ரசிகர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கருணாஸூக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :